வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 ஜூலை 2019 (21:23 IST)

கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்!

திமுக கட்சியினர் மகிழ்ச்சிக் கடலில் நீந்திக்கொண்டுள்ளனர். ஆம்! மு.க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு  இன்று இளைஞர் அணிச் செயலாளர் பதவி வழங்கி  திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார். இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் உட்பட பலர் இது வாரிசு அரசியல் என்று விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதெல்லாம் இருந்தாலும்,வாரிசு அரசியல் என்று குரல்கள் வலுத்தாலும் கூட  தன் அப்பாவுக்கு உறுதுணையாக கட்சிக்கு உதவுவேன் என்பதாக உதயநிதியின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் மின்னுகிறது.
இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தலைமை கழகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.. 
 
அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, திமுக இளைஞர் அணி செயலாளராக பணியாற்றி வரும் சாமிநாதன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதைலாக திமுக சட்டவிதி 18, 19 பிரிவுகளின்படி இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது திமுக தலைவராக உள்ள ஸ்டாலின் தலைவராவதற்கு முன் 30 ஆண்டுகள் இளைஞரணி செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை முரசொலியின் நிர்வாக இயக்குனராக பொறுப்பு வகித்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தான் இத்துணை வருட வாழ்க்கையில்,  முதன்முதலாக திமுக கட்சியில் தனக்கு  முக்கியமான பதவி வழங்கப்பட்டதை அடுத்து, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின்( தாத்தா ) நினைவிடத்தில் மலர் தூவி உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.