1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2024 (10:09 IST)

இரண்டு பெண்கள் கை குழந்தையுடன் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு!

வீரசிகாமணி பகுதியை சேர்ந்த  செல்வகுமார் மனைவி முத்துலட்சுமி என்பவருக்கு கடையம் அடுத்துள்ள கோதண்டராமபுரம்-  சேவரகாரன்பட்டி யில்  இடம் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
அந்த இடத்தை அப்பகுதியை சேர்ந்த சுகன்யா,அருள் செல்வி ஆகிய இருவரிடம் விற்பனை செய்வதற்காக அட்வான்ஸ் தொகையாக தலா 50,000 வீதம் ஒரு லட்ச ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.
 
அந்த இடத்திற்கு முறையான மனைப்பிரிவு பாதை அரசு அங்கீகாரம் இல்லாததால் அட்வான்ஸ் கொடுத்த பணத்தை சுகன்யா அருள் செல்வி திரும்ப கேட்டுள்ளனர் ஆனால்  அட்வான்ஸ் தொகை வாங்கி சுமார் 4 மாதங்கள் ஆகியும்    கொடுக்காமல் காலம் தழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
 
மேலும் அந்த இடத்தில் குளறுபடி இருந்து வருவதாகவும் அதனால் தன்னை ஏமாற்றி வருவதாகவும் கூறி  சுகன்யா மற்றும் அருள்செல்வி ஆகிய இருவரும் கடையம் காவல் நிலையம் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய அலுவலங்களுக்கு   புகார் மனு அளித்துள்ளனர். மேலும் தனக்கு எந்தவித நியாயம் கிடைக்கவில்லை என்பதால் முத்துலட்சுமி குடியிருக்கும் சேந்தமரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வீரசிகமணி மணி நகரில் உள்ள செல்வகுமார் மனைவி முத்துலட்சுமி வீட்டின் முன்பு சுகன்யா மற்றும் அருள்ச்செல்வி ஆகிய இருவரும் தங்களது கை குழந்தைகளுடன் தனது பணத்தை திரும்ப தருமாறு வலியுறுத்தி காலை முதல் மாலை வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
நீண்ட நேரம்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டும் முத்துலட்சுமி செவி சாய்க்கவில்லை இதனை தொடர்ந்து சேந்தமரம் இன்ஸ்பெக்டர் ஆடி வேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது  உடன் தகவல் அறிந்து  விரைந்து வந்த சேந்தமரம் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் குமார்  இரண்டு தரப்பினரிடமும் பேசி அனுப்பி வைத்தனர்.
 
இதனை தொடர்ந்து வெளியே வந்த பொழுது அருள்செல்வி மற்றும் சுகன்யா இருவரையும் முத்துலட்சுமி என்பவரின் உறவினரான  கோகுல கண்ணன் தனது மொபைலில் அனுமதி இன்றி வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
 
இதனை தொடர்ந்து தன்னை அனுமதி இன்றி வீடியோ எடுத்ததாக கூறி அருள்செல்வி கோகுலகண்ணன்  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேந்தமரம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். 
 
புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் கோகுல கண்ணனை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
50000 வீதம் தல ஒரு லட்ச ரூபாய்  ஏமாந்த இரண்டு பெண்கள் கை குழந்தைகளுடன்    வீட்டில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டசம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.