1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2024 (09:41 IST)

கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Electric Train
தாம்பரம் - கடற்கரை வழிதடத்தில் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை - விழுப்புரம் மற்றும் கடற்கரை - எழும்பூர் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஒரு சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் குறிப்பாக இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரவு நேரங்களில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள், தாம்பரத்தில் இருந்து இரவு நேரங்களில் புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் சென்னை கடற்கரையில் இருந்து செப்டம்பர் 5, 7 ஆகிய தேதிகளில் இரவு நேரத்தில் திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில்கள், திருவள்ளூரில் இருந்து அதே தேதிகளில் சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் ரயில்கள், சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் செப்டம்பர் 5, 7 தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. செப்டம்பர் 4, 6, 8 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள், அரக்கோணம் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன,

Edited by Siva