புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (09:46 IST)

ஒரே நாளில் 2 உயிரிழப்புகள்: தமிழகத்தில் கொரோனா பலி 5ஆக உயர்வு

இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வந்தாலும் தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை ஒரே ஒருவர் மட்டுமே கொரோனா வைரசால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இரண்டு பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தற்போது இன்று அதிகாலையிலேயே இருவர் அடுத்தடுத்து கொரோனா வைரசால் உயிரிழந்திருப்பது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
 
துபாயில் இருந்து சென்னை திரும்பிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்
 
அதேபோல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் ஒருவரும் இன்று பலியானார். இந்த இரண்டு உயிரிழப்புகளையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பலியாகி உள்ள எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது