வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 17 மார்ச் 2019 (08:24 IST)

பொள்ளாச்சி சம்பவ எதிரொலி – துப்பாக்கிக் கேட்கும் இளம்பெண்கள் !

பொள்ளாச்சியில் 7 ஆண்டுகளாக நடந்து வந்துள்ள பாலியல் வல்லுறவு சம்பவ எதிரொலியாக பெண்கள் இருவர் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக் கேட்டுள்ளனர்.

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக போலிஸ் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்ததாகவும், அதில் பார் நாகராஜன் என்பவர்  பொள்ளாச்சி 34 வார்டு அம்மா பேரவைச் செயலாளராக இருப்பதால் அவரை மட்டும் போலிஸார் விடுவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட திருநாவுக்கரசு என்ற மற்றொருக் குற்றவாளியும் மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டு இப்போது சிபிஐ வசம் உள்ளது. இது தொடர்பான விசாரணையை கடந்த சில நாட்களாக சிபிஐ மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தால் கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இளம்பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தங்களை தற்காத்துக்கொள்ள துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டுமென கோவை நல்லாம்பாளௌயத்தைச் சேர்ந்த தமிழீழம் மற்றும் ஓவியா ஆகிய இரு சகோதரிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் 7 ஆண்டுகளாக இந்த தொடர் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நடந்தும் காவல்துறை அதைக் கண்டு பிடிக்காததால் தங்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளனர்.