திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (15:01 IST)

மழைநீரால் நிரம்பிய சாண எரிவாயுக் குழி – சிறுமிகளின் உயிரை வாங்கிய பரிதாபம் !

வேலூரில் சாண எரிவாயுக்காக வெட்டப்பட்ட குழிகளில் மழைநீர் நிரம்பியது அறியாமல் அருகில் விளையாடிய ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் மரணமடந்துள்ளனர்.

வேலூரில் வரலாறு காணாத அளவுக்கு மழைப் பெய்து வருகிறது. இதனால் அங்கு எல்லா சாலைகள் மற்றும் சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் குழிகள் அனைத்திலும் தண்ணீர் நிரம்பியுள்ளது. வேலூர் மாவட்டம் ஏரியூர் கொல்லைமேடு பகுதியில் வசித்து வருகிறார் வேலு. இவரது மகள்களான ஹரிணி(6) மற்றும் பிரித்திகா (3) ஆகிய இருவரும் சாலைகளில் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.

அவர்கள் விளையாடிக்கொண்டிருந்த பகுதிக்கருகில் இருந்த சாண எரிவாயுவுக் குழி நீர் நிரம்பி இருக்க அதைக் கவனிக்காமல் இருவரும் அதில் தவறி விழுந்துள்ளனர். இதற்கிடையில் மகள்களைக் காணாததால் பெற்றோரும் உறவினர்களும் அவர்களைத் தேட குழந்தைகள் இருவரும் குழிக்குள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகள் இருவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் அந்தக் குழியை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளனர்.