ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2022 (11:05 IST)

திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி வைக்க தயார் – டிடிவி!

திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி வைக்க தயார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


ஜெயலலிதா மரணத்தில் திமுக அரசியல் செய்தால் அந்த கட்டி மாட்டி கொள்ளும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக வரம்புமீறி ஆட்சி செயல்படும்போது மூக்கணாங்கயிறு போல செயல்படுவதற்கு ஆளுநர் கண்டிப்பாக தேவைதான் என்றும் அவர் ஆளுநர் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

மேலும் ஜெயலலிதா மரணத்தில் திமுக அரசியல் செய்தால் திமுக தேவையில்லாமல் மாட்டிக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை வெளியான நிலையில் அதில் பரபரப்பு தகவல்கள் இருந்ததையடுத்து டிடிவி தினகரன் இந்த கருத்தை கூறியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அவர் மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. ஆட்சியில் இருக்கும் போது இருவரும் அதிகாரத்துடன் செயல்படுகின்றனர். திமுகவை வீழ்த்த கூட்டணியால்தான் முடியும். திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி வைக்க தயார் என  கூறியுள்ளார்.
 
Edited By: Sugapriya Prakash