செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2018 (19:51 IST)

ரஜினி, கமலால் அரசியலில் மாற்றமும் இல்லை; எனக்கு பயமும் இல்லை: தினகரன்!

நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் அரசியலில் நுழைவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், டிடிவி தினகரன் ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் வருகையை வரவேற்றாலும், அவர்களால் அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை என தெரிவித்துள்ளார். 
 
ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தினகரன் அதிமுக, திமுக போன்ற கட்சிகளை எதிர்த்து அமோக வெற்றி பெற்றார். அதன்பின்னர் சட்டசபை கூட்டத்தில் கலந்துக் கொண்டு தனது ஆதிகத்தை நிரூபித்தார். 
 
இந்நிலையில், நடிகர்களின் அரசியல் பிரவேசம் பற்றி அவர் பேசியதாவது. ரஜினியும், கமலும் கட்சி தொடங்க போவதாக அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் தேர்தலில் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை, பயமும் இல்லை. அவர்கள் உள்ளாட்சி தேர்தலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை என்று உறுதியாய் தெரிவித்துள்ளார். 
 
மேலும், உள்ளாட்சி தேர்தலில் எங்கள் பலம் தெரியும். நாங்கள் அதிமுக அம்மா அணி என்று பெயரில் செயல்படுவோம். ரஜினி, கமல் என எவர் வந்தாலும் நான்தான் எப்போதும் நம்பர் 1 என்று குறிப்பிட்டுள்ளார்.