1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2018 (10:52 IST)

என் ஆயுள் முடிவதற்குள் இந்தியாவை பெருமையடைய செய்வேன் - கமல்ஹாசன் பேச்சு

நடிகர் கமல்ஹாசன் வருகிற 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை துவங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

 
நடிகர் கமல்ஹாசன் தனது மையம் விசில் செயலியை அறிமுகம் செய்ய தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் கடந்த 16-ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தான் பிறந்த ஊரில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக கூறியுள்ளார். 
 
வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி தனது பிறந்த ஊரான ராமநாதபுரத்தில் அதனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாகவும், மறைந்த முன்னள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்தார்.
 
இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள கனரா வங்கியின் டிஜிட்டல் கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் “எனது ஆயுள் முடிவதற்குள் இந்தியாவை பெருமையடைய செய்வேன். இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்தே தொடங்கும். அதற்கான எனது பயணம் அடுத்த மாதம் தொடங்கும். அப்போது எனக்கு பல சகோதரர்கள் கிடைப்பார்கள்” என அவர் பேசியுள்ளார்.