திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2018 (11:29 IST)

எத்தனை கோடி கொடுத்தாலும் இதில் நடிக்க மாட்டேன்; ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் அரசியல் பயணத்தில் முதலாவதாக மதுரையில் மாநாடு நடத்தப்படுவதாகவும், அதில் கட்சியின் பெயர், கொடி குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே கூறியிருந்தார்.
ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்ததை தொடர்ந்து மன்ற நிர்வாகிகள் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியில்  தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா, அரசியல் என தற்போது பிஸியாகவுள்ளார். இன்னும் சில தினங்களில் இவர் தன் கட்சியின் பெயர், கொள்கைகளை  அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியாவில் சமீபத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அங்கு அவரிடம் ஒரு விளம்பர நிறுவனம் இதில் நடியுங்கள் இரண்டு நாட்களுக்கு ரூ. 30 கோடி தருவதாக கூறியுள்ளனர். ஆனால், ரஜினிகாந்த் எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பரத்தில் நடிக்க  மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டராம். இவ்வாறு செய்திகள் வெளியாகியுள்ளது.