புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (17:21 IST)

ஓபிஎஸ் கருத்தை வரவேற்கிறேன், ஈபிஎஸ் துரோகி: டிடிவி தினகரன் ஆவேசம்

Dinakaran
ஓபிஎஸ் கருத்தை வரவேற்கிறேன் என்றும் எடப்பாடிபழனிசாமி ஒரு துரோகி என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், சசிகலா டிடிவி தினகரன் உள்பட அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழி நடத்துவோம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்தார். 
 
ஆனால் இந்த அழைப்பை எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்ததோடு, சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். இந்த நிலையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற ஓபிஎஸ் கருத்தை சுயநலமற்ற ஜனநாயக நம்பிக்கை உள்ளவர்கள் வரவேற்பார்கள் என்று சுயநலத்துடன் பதவி வெறி பிடித்து ஆடும் சிந்தனை உள்ளவர்கள் எப்போதும் எதிர்ப்பார்கள் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அவருடைய இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.