1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 3 பிப்ரவரி 2021 (19:22 IST)

மன்னிப்பு கேட்க முடியாது: கேபி முனுசாமி கருத்துக்கு தினகரன் பதிலடி!

டிடிவி தினகரன் மன்னிப்பு கேட்டால் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என கேபி முனுசாமி கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சமீபத்தில் பேட்டியளித்த அதிமுகவின் பிரமுகர் கேபி முனுசாமி, ‘டிடிவி தினகரன் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அதிமுகவின் தொண்டராக சேர்த்துக்கொள்ள கடிதம் கொடுத்தால் அது பரிசீலிக்கப்பட்டு மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று கூறினார் 
 
இது குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன் அவர்கள் ’யார் மன்னிப்பு கேட்க வேண்டும்? யார் மன்னிக்கப்பட வேண்டும்? என்பது மக்களுக்கு தெரியும். சின்னம்மா அவர்களின் சென்னைக்கு வந்த பிறகு என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் 
 
கேபி முனுசாமி கூறுவதுபோல் நான் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார் டிடிவி தினகரனின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது