1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Taliban Rejects Pakistan's Claim of Indian Missile Strike on Afghan Soil

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்தியா
இந்திய ஏவுகணை ஆப்கானிஸ்தான் மண்ணில் விழுந்தது என்ற பாக் குற்றச்சாட்டு பொய் என தலிபான் விளக்கம்!
 
பாகிஸ்தான் வெளியிட்ட ஒரு புதிய குற்றச்சாட்டில், இந்திய ராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அதிகாரபூர்வமாக மறுத்துள்ளது.
 
ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் பேசிய செய்தித் தொடர்பாளர் இனயதுல்லா கவாரிஸ்மி, “இந்தியா எங்கள் நாட்டுக்குள் ஏவுகணைகள் தாக்கியதாக பாகிஸ்தான் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. எங்கள் எல்லைக்குள் அப்படி எதுவும் நடக்கவில்லை,” என ஹுரியத் வானொலிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
 
பாகிஸ்தான், இந்தியா நடத்திய தாக்குதல் வேறு ஒரு நாட்டின் எல்லையை கடந்தது என்பதை நிரூபிக்க, ஆப்கன் மண்ணிலும் தாக்குதல் நடந்தது என்று கூறி இருந்தது. ஆனால், தலிபான் அரசு, இது போலி தகவல் என்றும், இந்தியா தாக்கிய இடங்கள் எல்லாம் பாகிஸ்தானுக்குள்ளேயே இருந்தன என்றும் தெளிவாக தெரிவித்துள்ளது.
 
இதற்கு முன், இந்திய வெளியுறவு அமைச்சகம், “பாகிஸ்தான் பரப்பும் தகவல்கள் பொய்யானவை. ஆப்கானிஸ்தானுக்கு யார் நட்பு நாடு, யார் எதிரி நாடு என்பது தெரியும்” என கூறியிருந்தது.
 
இந்நிலையில், தலிபானின் உறுதியான விளக்கம் பாக் பொய்யை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
ஒருவழியாக அமலுக்கு வந்த போர் நிறுத்தம்! காஷ்மீரில் திரும்பியது இயல்புநிலை!