புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 23 நவம்பர் 2022 (17:11 IST)

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தும் கூட்டணியில் அமமுக இருக்கும்: டிடிவி தினகரன்

dinakaran
வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த கூடிய கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இருக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் அந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணிகளும் இந்த முறை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தலில் திமுகவை எந்த கூட்டணி வீழ்த்துகிறதோ, அந்த கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இருக்கும் என்று கூறினார். 
 
எடப்பாடி பழனிசாமி செய்த தவறால்தான் அதிமுக சின்னம் இல்லாமல் தற்போது நீதிமன்றத்தில் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் அதிமுக குறித்து தற்போது பேசுவது தேவையற்றது என்றும் தேர்தல் சமயத்தில் அது குறித்து பேசிக் கொள்ளலாம் என்றும் கூறினார். மேலும் அடுத்த மாத இறுதியில் கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran