ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 16 நவம்பர் 2022 (15:17 IST)

2024 நாடாளுமன்ற தேர்தல்: அரசியல் கட்சிகள் கூட்டணி மாறுகிறதா?

political
2024 பாராளுமன்ற தேர்தல் கூட்டணியில் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக பாமக ஆகிய கட்சிகள் இருந்த நிலையில் தற்போது பாமக கூட்டணி மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
கடந்த சில மாதங்களாக திமுகவுடன் பாமக நெருக்கம் காட்டி வருவதாகவும் எனவே வரும் 2024 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க பாமக திட்டமிட்டுள்ளதாகவும் என்றும் கூறப்படுகிறது 
 
திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகள் விடுதலை, 10 சதவீத இட ஒதுக்கீடு ஆகிய பிரச்சினைகளில் திமுகவுடன் கருத்து வேறுபாடுகளுடன் இருக்கும் காங்கிரஸ் தனித்து கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
அவ்வாறு காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி அமைந்தால் அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, அமமுக, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட சில கட்சிகள் இணையலாம் என்று கூறப்படுகிறது
 
பாஜகவை பொருத்தவரை அதிமுகவுடன் கூட்டணி என்பதை உறுதி செய்துள்ளது என்பதும் 7 முதல் 13 தொகுதிகள் வரை அதிமுகவிடம் கேட்டு பெறலாம் என்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
எடப்பாடி பழனிச்சாமி பாஜகவைகூட்டணி சேர்ப்பதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று கூறி இருப்பதாகவும் ஆனால் ஓபிஎஸ்-ஐ மட்டும் சேர்க்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி இருப்பதாகவும் தெரிகிறது.
 
Edited by Mahendran