ஈரோடு இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட வாய்ப்பா?
ஈரோடு இடைத்தேர்தல் குறித்த தேர்தல் கமிஷனின் அறிவிப்பு வெளியானதில் இருந்து தமிழக அரசியல் களம் பரபரப்பில் உள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் அதிமுக கூட்டணியில் அதிமுகவும் போட்டியிட இருக்கும் நிலையில் பாஜக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆக்ய கட்சிகள் இந்த தேர்தலில் என்ன முடிவு எடுக்க உள்ளன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் வரும் 27ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் அந்த தொகுதியில் நானே போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
டிடிவி தினகரன் போட்டியிட்டால் சென்னை ஆர் கே நகர் தேர்தல் போல், ஈரோடு கிழக்கு தொகுதி மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Mahendran