புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2017 (10:31 IST)

டிச.29ல் பதவியேற்பு ;அடுத்து ஆர்.கே.நகர் மக்களுக்கு நன்றி : அடித்துக் கிளப்பும் தினகரன்

தன்னை வெற்றியடைய செய்த ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு நன்றி கூற வருகிற ஜனவரி மாதம் முதல் வாரத்தில் டிடிவி தினகரன் செல்ல இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

 
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40, 707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதேபோல், திமுக வேட்பாளர் மதுசூதனன் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததோடு டெபாசிட் இழந்துள்ளார்.  
 
தினகரன் தரப்பு பணப்பட்டுவாடா செய்தே இந்த வெற்றியை பெற்றுள்ளது என அதிமுக, திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியது. ஆனால், தினகரன் தரப்பு அதற்கு மறுப்பு தெரிவித்தது. 
 
அந்நிலையில், தன்னை வெற்றியடைய வைத்த ஆ.கே.நகர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க இதுவரை தினகரன் செல்லவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தினகரன், இன்னும் சில நாட்கள் கழித்து செல்வேன் எனக் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், வருகிற ஜனவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் அவர் ஆர்.கே.நகர் மக்களுக்கு நன்றி கூற செல்கிறார் என்பது தெரியவந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அவசர கதியில் ஆர்.கே.நகரை வலம் வந்தவர், இந்த முறை நிதானமாக ஆர்.கே.நகரின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்திக்கவுள்ளாராம்.
 
வருகிற 29ம் தேதி அவர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.