Daily Horoscope
✕

இதுதான் திமுகவின் திராவிட மாடலா? சீண்டும் டிடிவி!

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 29 மார்ச் 2022 (16:01 IST)
பள்ளிக் குழந்தைகளை கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது குறித்து அமமுக பொதுச்செயளாலர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

 
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுக்காவில் உள்ள முள்ளாம்பட்டி அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதில், சுமார் 50 கும் மேர்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் பள்ளிக் குழந்தைகளை கழிவறையைச் சுத்தம் செய்யக் கூறி ஆசிரியர்கள் நிர்பந்தப்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தச் சம்பவம் குறித்துப் பள்ளிக்கல்வித் தலைமையிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.  இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயளாலர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் பால் மணம் மாறாத பிஞ்சுக் குழந்தைகள் பள்ளிக்கூடக் கழிவறையை சுத்தம் செய்வதாக வெளியாகியிருக்கும் காணொளி மனம் பதைக்கச் செய்கிறது. 
 
புத்தங்களை ஏந்த வேண்டிய கைகளால் கழிவறையை சுத்தம் செய்ய வைப்பது நியாயமா? இதுதான் தி.மு.க.வின் திராவிட மாடலா? இனி, இப்படியொரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திடக்கூடாது. மாணவர்கள் மகிழ்ச்சியோடு வந்து படிக்கும் இடமாக அரசு பள்ளிக்கூடங்கள் மாற்றப்பட வேண்டும்.

எல்லாம் காட்டு

கூட்டணியிலிருந்து வெளியேறும் கம்யூனிஸ்ட்டுகள்?!.. தவெக அடுத்த மூவ் என்ன?...

பஸ்ல போகும் ஆண்களின் நிலைமை கொடுமை!.. தாய்மாமன் புகழ் ஓங்குக!.. புளூசட்ட மாறன் நக்கல்...

இந்த பஸ்ல ஏன் நீங்க ஏறினீங்க?.. வெற்றிப்பயண திட்டத்தால் ஆண்களுக்கு வந்த சோதனை....

அரசின் தலைவராக 25 ஆண்டுகள்!.. நரேந்திர மோடி சாதனை...

கூகுள் பிக்சல் 10a ஸ்மார்ட்போன் விலை ரூ. 6,000 அதிரடி உயர்வு..இந்தியாவில் இன்றைய விலை என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments