வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2017 (12:32 IST)

இவர்கள் சசிகலா காலில் விழும் புகைப்படத்தை வெளியிட்டால்? - தினகரன் அதிரடி பேட்டி

அதிமுக கட்சிக்கும் தற்போது எடப்பாடி தலைமையில் நடைபெற்று வரும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடி பேட்டியளித்துள்ளார்.


 

 
தினகரனுக்கு எதிராக எடப்பாடி அணி செயல்பட்டு வரும் இந்த சூழ்நிலையில், சமீபத்தில் மதுரை மேலூரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார் தினகரன். 
 
இந்நிலையில், அந்நிய செலாவணி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வந்த அவர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 
யார் மீதோ உள்ள பயம் காரணமாக, எடப்பாடி பழனிச்சாமி அணி எனக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எனக்கு எதிராக பல கருத்துகளை கூறிவருகிறார்.


 

 
என் காலிலும் விழ வந்தார். அதை நான் தடுத்தேன். தற்போது எனக்கு எதிராகவே பேசி வருகிறார். அவர் சசிகலா காலில் விழுந்த புகைப்படத்தை வெளியிட்டால் அவருக்கு அசிங்கமாகும். இவ்வளவு பேசும் அவர், நாங்கள் அவருக்கு அளித்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்வாரா?. யார் திருடர்கள் என்பதை தமிழக மக்கள் அறிவர்.  கட்சியை கொள்ளைப்புறமாக கைப்பற்றிவிடலாம் என சிலர் எண்ணி வருகிறார்கள். கட்சிக்கும், தற்போது நடைபெற்று வரும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என அவர் தெரிவித்தார்.
 
மேலும், கமல்ஹாசனின் குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.