திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 அக்டோபர் 2018 (22:12 IST)

அமைச்சர் செல்லூர் ராஜூ நன்றி உடையவர்: தினகரன் பாராட்டு

அதிமுகவை எதிர்காலத்தில் ஒரு பெண் தலைவர்தான் வழிநடத்துவார் என சமீபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சசிகலாவைத்தான் அவர் மறைமுகமாக கூறுவதாக சொல்லப்பட்டது

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய அம்முக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 'மற்ற அமைச்சர்களைவிட செல்லூர் ராஜூவுக்கு கொஞ்சம் நன்றி விசுவாசம் அதிகம் என்றும், மற்றவர்கள் எல்லாம் சின்னம்மாவை பெயர் சொல்லி அழைக்கும் நிலையில் இவர் மட்டும் நன்றி உணர்வுடன் பெண் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார் என்றும் கூறினார்.

அதிமுகவில் இதற்கு முன்னரும் பெண் ஒருவர்தான் தலைமை ஏற்றிருந்தார், இனிமேலும் பெண்மணி ஒருவர்தான் தலைமை ஏற்பார். அவர்தான் சின்னம்மா என்று கூறினார். மேலும் அதிமுகவையும் ஆட்சியையும் விரைவில் கைப்பற்றுவோம் என்றும் தினகரன் தெரிவித்தார்