புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 ஜூன் 2020 (15:26 IST)

பறவைகள் சரணாலயத்தை சுருக்குவது கண்டனத்திற்குரியது! – ட்வீட் பறக்கவிட்ட டிடிவி!

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பை குறைப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முக்கியமான பறவைகள் சரணாலயத்தில் ஒன்றாக விளங்குவது தமிழகத்தில் உள்ள வேடந்தாங்கல் சரணாலயம். பல்வேறு நாடுகளிலிருந்து வலசை வரும் பறவைகள் வாழும் இடமாக உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சுற்றுலாதளமாகவும் விளங்குகிறது. இந்நிலையில் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதிகயை குறைக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் ” வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய நிலத்தைச் சுருக்கி கட்டுமானங்களைச் செய்வதற்கு தமிழக அரசு முயற்சிப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உலகம் முழுக்க சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்லுயிர் பெருக்க மண்டலங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், அப்படிப்பட்ட இடமான வேடந்தாங்கலை சிதைக்க முனைவது கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.