சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 30 மே 2024 (07:47 IST)

டிடிஎப் வாசன் மீண்டும் கைது.. மதுரை போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

TTF Vasan
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன்ஏற்கனவே சாலையில் சர்ச்சைக்குரிய வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் சமீபத்தில் சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துகுடிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது அவர் செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகர காவல் ஆயுதப்படை காவலர் அளித்த புகாரின் பேரில் டிடிஎப் வாசன் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே சென்னை - பெங்களூரு சாலையில் டிடிஎப் வாசன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முயன்றதாகவும் அப்போது ஏற்பட்ட விபத்தை அடுத்து அவர் சாலையில் அபாயகரமாக வாகனத்தை ஒட்டியதற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் சில மாதங்கள் கழித்து டிடிஎப் வாசன் ஜாமீனில் வெளிவந்த நிலையில் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva