செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 28 ஜூன் 2022 (14:49 IST)

அறநிலையத்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது: சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

High Court
கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்காமல் அறநிலையத்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது 
 
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது ஆனால் உத்தரவை நிறைவேற்ற வில்லை என்பதை அறிந்த நீதிபதி கோவிலுக்கு சொந்தமான 18 இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்படாததே இதற்கு காரணம் என்றும் 50 ஆண்டு காலமாக இருக்கின்ற ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அறநிலைத்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது என்றும் கடுமையாக விமர்சனம் செய்தது.