திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 5 ஜனவரி 2022 (13:15 IST)

மஞ்சப்பையுடன் சட்டசபைக்கு வந்த திமுக எம்.எல்.ஏ: வைரல் புகைப்படம்!

மஞ்சப்பையுடன் சட்டசபைக்கு வந்த திமுக எம்.எல்.ஏ: வைரல் புகைப்படம்!
சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மஞ்சள் பையை மீண்டும் அறிமுகப்படுத்தி பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்திய நிலையில் மஞ்சள் பையுடன் திமுக எம்எல்ஏ ஒருவர் சட்டசபை கூட்டத்திற்கு இன்று வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு மஞ்சள் பையுடன் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அவர்கள் வந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 
 
தமிழகத்தில் உள்ள அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்தி விட்டு மீண்டும் மஞ்சப்பை மாற வேண்டும் என முதலமைச்சர் அறிவித்த நிலையில் அவரது அறிவுறுத்தலை ஏற்று கொண்டதற்கு இணங்க டிஆர்பி ராஜா அவர்கள் மஞ்சள் பையுடன் சட்டசபைக்கு வந்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது
 
இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது