1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (11:18 IST)

திமுக எம்பி கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் அமித்ஷா!

திமுக எம்பி கனிமொழிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்து உள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளது. 
 
திமுக எம்பி கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் திமுக தொண்டர்கள் அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் நேரிலும் தொலைபேசியிலும் சமூக வலைதளங்களில் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் சற்று முன்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் திமுக எம்பி கனிமொழி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தொலைபேசியில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது
 
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அமித்ஷா அவர்களுக்கு திமுக எம்பி கனிமொழி நன்றி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது