புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (08:57 IST)

மாணவர்கள் படிகளில் தொங்கினால் நடவடிக்கை! – ஓட்டுனர், நடத்துனருக்கு எச்சரிக்கை!

மாணவர்கள் படிகளில் தொங்கி செல்ல அனுமதித்தால் ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்வதும், சிலர் ஆபத்தான சாகச செயல்களில் ஈடுபடுவதும் கடந்த சில நாட்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. படிகளில் நின்று மாணவர்கள் பயணிப்பதால் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழக போக்குவரத்துத் துறை புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரி மாணவர்களை படிகளில் நின்றபடி பயணிக்க அனுமதித்தால் பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க உயரதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.