திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 2 டிசம்பர் 2023 (09:17 IST)

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள்: முழு விவரங்கள்..!

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் குறித்த தகவலை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது.  

புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மஞ்சம்பாக்கம் -  வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்  கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை  நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கை காரணமாக மூடப்பட்டுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாலை விழுந்த மரங்கள் மற்றும் அகற்றுதல் எதுவும் இல்லை என்றும் இதுவரை பெய்த கனமழையால் எந்த இறப்புகளும் பதிவாகவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீரில் மூழ்குதல் மின்சாரம் தாக்குதல் மற்றும் மருத்துவ உதவிகள் விவரம் இல்லை என்றும் சென்னை பெருநகர காவல் துறை அறிவித்துள்ளது.

Edited by Mahendran