புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2019 (11:59 IST)

”மீம்ஸ்” மூலம் அதகளப்படுத்தும் காவல் துறை..

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையாக சமூக வலைத்தளங்களில் மீம்களுடன் களமிறங்கியுள்ளது நெல்லை காவல் துறை.

சமூக ஊடகங்களில் தற்போது மீம்கள் மூலம் செய்திகளையோ தகவல்களையோ தெளிவுபடுத்தும் வழக்கம் அதிகாமாகி வருகிறது. குறிப்பாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவை கொண்டு பல மீம்கள் உருவாக்கப்படுகின்றன. இது போன்ற மீம்களால் ஒரு செய்தியை தெரிவிக்கும்போது அது வெகு விரைவில் ஒரு நபருக்கு புரிந்துவிடுவதுடன், சுவாரஸ்யமாகவும் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சாலை விதிகளை குறித்தும் சமுக விழிப்புணர்வு குறித்தும் மீம்கள் மூலம் வெளிபடுத்தும் வகையில் மீம் உருவாக்கத்தில் களமிறங்கியுள்ளது நெல்லை மாநகர காவல் துறை. அதன் படி டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற இணையத்தளங்களின் மூலம், ஹெல்மேட் போட வேண்டும், சாலையில் வாகனத்தில் செல்லும்போது மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வுகளை மீம்கள் மூலம் அறிவிக்கின்றனர். இது மிகவும் புதுமையான ஒன்றாக பார்க்கப்படுவது மட்டுமல்லாமல், இது வெகுஜன மக்களிடமும் வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.