வியாழன், 31 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 30 அக்டோபர் 2024 (14:14 IST)

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாத பேருந்துகள்.. போக்குவரத்து நெருக்கடி..

கடுமையான போக்குவரத்து நெருக்கடி காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், இதனால் கிளாம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் வரை வரிசையாக பேருந்துகள் நின்று கொண்டிருப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பொது மக்களின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சென்னையில் இருந்து செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்திற்குள் செல்ல ஒரே ஒரு வழி மட்டுமே இருக்கும் நிலையில், அந்த ஒரு வழியாக செல்வதில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் வண்டலூர் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு பேருந்துகள் வரிசையாக போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி இருப்பது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

கிளாம்பாக்கத்தில் ஏற்பட்ட இந்த போக்குவரத்து பாதிப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Edited by Siva