திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (07:28 IST)

சென்னையின் முக்கிய சாலையில் போக்குவரத்து திடீர் மாற்றம்:

சென்னையின் முக்கிய சாலையில் போக்குவரத்து திடீர் மாற்றம்
சென்னை நந்தனம் பகுதியில் போக்குவரத்து மாற்றங்களை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளதால் இந்த மாற்றத்தை வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
சென்னை அண்ணாசாலை மற்றும் நந்தனம் சந்திப்பில் இதுநாள் வரை சேமியர்ஸ் சாலையில் இருந்து வெங்கட்நாராயணா சாலைக்கும், வெங்கட்நாராயணா சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கும் வாகனங்கள் நேரெதிராக செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தன.
 
இந்த நிலையில் இனிமேல் வெங்கட்நாராயணா சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கு வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வழியாக நேராக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. அதற்கு பதிலாக தெற்கு போக் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி ம.பொ. சிவஞானம் சாலை சந்திப்பை அடைந்து செல்ல விரும்பும் இடத்துக்குச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சேமியர்ஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வழியாக இடதுபுறம் திரும்பி சைதாப்பேட்டை நோக்கி செல்லவும் வலதுபுறம் திரும்பி தேனாம்பேட்டை நோக்கிச் செல்லவும் எவ்வித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது