செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (16:20 IST)

நாளை சில மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள்?

Holiday
உள்ளூர் திருவிழா காரணமாக ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை சில மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

நாளை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முடிவுரை விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது.

அதேபோல் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி திருவிழா நடைபெற உள்ள நடைபெற உள்ளதை அடுத்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் அரசு கருவூலங்கள் மட்டும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடி 18 பெருக்கு தினத்தை முன்னிட்டு சேலம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva