வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (13:12 IST)

அமைச்சர்கள் தலைமையில் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம் காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள அங்கூரான் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டி திட்டபணிகளைஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின், நகராட்சி  நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர்கள் தொடங்கி வைத்தார்கள்.
 
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், பிமல் பட்வாரி (அங்கூரான் பவுன்டேசன்), அரசுத்துறை அலுவலர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.