1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (14:42 IST)

நாளைக்கு ஆடிப்பெருக்கு இன்னும் தண்ணீர் வரலை – சோகத்தில் டெல்டா

நாளை (சனிக்கிழமை) ஆடிப்பெருக்கு நடைபெற இருக்கும் நிலையில் காவிரி ஆற்றில் இன்னும் தண்ணீர் வராததால் மக்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கின்போது நீர்நிலைகளுக்கு சென்று மக்கள் வழிபடுவது வழக்கமான ஒன்று. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு நாட்களில் நீர்நிலைகள் வறண்டுதான் கிடக்கின்றன. இந்த முறை ஆடிப்பெருக்கிற்காக 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டிருந்தாலும். அவை இன்னும் காவிரியின் தொன்மையான பகுதிகளான திருச்சி, கும்பகோணம்,தஞ்சாவூர் பகுதிகளை சேரவில்லை.

காவிரி டெல்டா பகுதிகளில் ஆடிப்பெருக்கு என்பதே காவிரிக்கு அவர்கள் செய்யும் விழாதான். ஆனால் அந்த காவிரியே வறண்டு கிடக்கும் நிலையில் ஆடிப்பெருக்கை கொண்டாடுவதில் மக்களிடையே சுணக்கம் ஏற்பட்டுள்ளது.