தக்காளி விலை படிப்படியாக குறைவு.. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புமா?
கடந்த சில வாரங்களாக தக்காளி விலை 150 ரூபாய் வரை விற்பனை ஆகி வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து இன்று தக்காளி விலை ரூ.90 என விற்பனையாகி வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதை அடுத்து விலையும் குறைந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.130 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனையாகி வந்த நிலையில் இன்று 90 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாகவும் சில்லறை கடைகளில் 100 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தக்காளி விலை இன்னும் ஒரு சில வாரங்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்றும் 30 முதல் 50 ரூபாய் வரை தக்காளி விலை கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் தக்காளியின் விலை படிப்படியாக குறைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
Edited by Siva