குறைய தொடங்கியது தக்காளி விலை! – மகிழ்ச்சியில் மக்கள்!
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளி விலை உயர்ந்து வந்த நிலையில் தற்போது விலை குறையத் தொடங்கியுள்ளது.
தமிழகம் மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்து வரும் நிலையில் உள்ளூர் சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்ததால் கிடுகிடுவென விலை உயர தொடங்கியது. இதனால் அதிகபட்சமாக தக்காளில் விலை கிலோ ரூ.150 ஐ தாண்டி விற்றதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
இந்நிலையில் பசுமை பண்ணைகள் மூலமாக குறைந்த விலைக்கு தக்காளி விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேசமயம் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் விலை குறைய தொடங்கியுள்ளது. சென்னையில் முதல் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.30 குறைந்து ரூ.80 ரூபாய்க்கும், நாட்டு தக்காளில் கிலோ ரூ.70க்கும் விற்பனையாகி வருகிறது. வரத்து அதிகரிக்க தொடங்கும்போது மேலும் விலை குறையும் என்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.