கிலோ 2 ரூபாய்க்கு வீழ்ச்சியடைந்த தக்காளி! – வேதனையில் விவசாயிகள்!
தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கனமழையால் தக்காளி வரத்து குறைந்த நிலையில் கிலோ 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்றது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. விவசாயிகள் பலரும் தக்காளி பயிர் செய்திருந்த நிலையில் எதிர்பார்த்த விளைச்சல் கிடைத்துள்ளது.
ஆனால் சந்தைகளில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சந்தையில் வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளி கிலோ ரூ.2 அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், பலரும் வாங்க முன்வரவில்லை. இதனால் விவசாயிகள் பலரும் வேதனையில் தக்காளியை கீழே கொட்டி சென்றுள்ளனர்.