வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

இன்றும் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை; என்ன காரணம்?

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல் டீசல் விலை கடந்த 20 நாட்களுக்கு மேல் உயராமல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை குறைந்து வருவது பொதுமக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது
 
இந்த நிலையில் இன்றைய பெட்ரோல் விலை ஒரு தகவலைப் பார்ப்போம். சென்னையில் இன்று பெட்ரோல் விலை 18 காசுகள் குறைந்து 92.77 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது 
 
அதே போல் டீசல் விலை 19 காசுகள் குறைந்து 86.10 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டின் விலையும் குறைந்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சிப் உள்ளாக்கியது 
 
ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதாகவும், இதன் காரணமாகத்தான் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. சர்வதேச சந்தையின் விலையை கணக்கில் கொண்டால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சுமார் 30 ரூபாய் இந்தியாவில் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது