வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 1 மார்ச் 2021 (08:43 IST)

சட்டமன்ற தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை செய்யும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

சட்டமன்ற தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை செய்யும் தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்னும் தேர்தலுக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் மட்டுமே இருக்கின்றன. இந்த நிலையில் ஒரு பக்கம் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் நிலையில் இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தவும் தயாராகி வருகிறது 
 
இந்த நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் பன்னிரண்டு முப்பது மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவதும், அரசியல் கட்சியினர் தங்களது பரப்புரை திட்டம் குறித்து முன்கூட்டியே தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெறுவது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை இந்த ஆலோசனையின் போது தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது