1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (08:44 IST)

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு: பொதுமக்கள் ஒத்துழைப்பு

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் முழுவதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் இந்த மாதமும் அனைத்து ஞாயிறுகளிலும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து இன்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் பால், மருந்து கடைகள், மருத்துவமனை, தவிர மற்ற அனைத்தும் இயங்கவில்லை. சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டு ஊரடங்கு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் சாலைகளில் அரசு வாகனங்கள், ஆம்புலன்ஸ் தவிர எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என்பதால் தேசிய நெடுஞ்சாலை உள்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது