ஊரடங்கை மீறினால் பாஸ்போர்ட் முடக்கம்: கறார் காட்டும் காவல்!
144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பினால் இதுவரை 6 கட்ட ஊரடங்குகள் அமலில் உள்ள நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு முடிந்த நிலையில் 7 ஆம் கட்ட ஊரடக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அமலுக்கு வந்தது. கடந்த முறை அறிவிக்கப்பட்ட அதே தளர்வுகளும் கட்டுபாடுகளும் தான் இந்த முறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தனை நாள் கடைபிடிக்கப்பட்டுள்ளதை போல ஊரடங்கு முடிவும் வரை சென்னையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆம், ஊரடங்கை மீறுவோர் மீது இந்திய தண்டனை சட்டம் 188, 269, 271 உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்படும். இதில் குற்றவாளியாக சேர்க்கப்படும் நபர்களால் வழக்கு முடியும் வரை அரசு வேலைக்கு செல்ல முடியாது. பாஸ்போர்ட்டு பெற முடியாத நிலை உருவாகும்.
மேலும், கல்வி, தொழில், மருத்துவத்திற்காகவும் வெளிநாடு செல்ல முடியாது. தனியார் நிறுவன வேலைக்கு செல்வதிலும் சிக்கல்கள் ஏற்படும் என தெரிகிறது. அதேபோல 6 மாதம் முதல் 2 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.