Daily Horoscope

இன்று வெளியாகிறது திமுக தேர்தல் அறிக்கை.. முக்கிய அம்சங்கள் இடம்பெறுமா?

Written By Siva
Updated: புதன், 20 மார்ச் 2024 (07:12 IST)
திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாக இருப்பதாகவும் அதில் பல முக்கிய அம்சங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள், தொகுதி ஒதுக்குதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கி விட்ட நிலையில் அடுத்த கட்டமாக முதல்வர் மு க ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லவும் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக திமுக எம்பி கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மாநிலம் முழுவதும் பொதுமக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டு வந்த நிலையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளதாகவும் அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று தேர்தல் அறிக்கை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து திமுக கட்சியினர் மட்டும் இன்றி பொதுமக்களும் திமுக தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இருக்கும் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments