திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 7 மே 2020 (18:29 IST)

இன்றும் 500க்கும் மேல் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்று தமிழகத்தில் 580 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 5,409ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 580 பேர்களில் சென்னையில் மட்டும் 316 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பேர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2644ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது என்பதும், தமிழகத்தில் இன்று மட்டும் 14195 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தமிழகத்தில் மொத்தம் 2,02,436 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
இன்றைய கொரோனா பாதிப்பில் சென்னையை அடுத்து திருவள்ளூரில் 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட்டை தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, திருவள்ளூரை அடுத்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் குறித்த எண்ணிக்கையை கீழ்க்கண்ட அட்டவணையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்
இன்றும் 500க்கும் மேல் கொரோனா பாதிப்பு: