Daily Horoscope

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2: நேர்காணல் முடிந்த பின்னரும் 29 காலியிடங்கள்.. மீண்டும் நேர்முகத்தேர்வு..!

Written By Siva
Updated: வியாழன், 21 மார்ச் 2024 (08:36 IST)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 பிரிவில் நேர்காணல் முடிந்த பின்னரும் இன்னும் 29 காலியிடங்கள் இருப்பதால் அந்த இடத்தை  நிரப்ப இறுதி கட்ட நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
 
குருப்-2 தேர்வில் நேர்காணல் கொண்ட பதவிகளில் உள்ள 161 காலியிடங்களுக்கு 2 கட்டங்களாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்ட பின்னரும் இன்னும் 29 காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
 
நேர்காணல் பதவிகளில் உள்ள இடங்களை முழுவதுமாக நிரப்ப கடைசி கட்டமாக நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியுள்ள தேர்வர்களுக்கு நேர்காணலில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.
 
சம்பந்தப்பட்ட தேர்வர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். இதுகுறித்து அந்த தேர்வர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பப்படும். அவர்கள் ஒருமுறை பதிவு (OTR) வாயிலாக தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.
 
நேர்காணல் பதவிகளுக்கான இந்த இறுதி நேர்முகத்தேர்வு நடத்தப்பட்ட பிறகு நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments