Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப்-1 முதனிலைத் தேர்வு தேதி திடீர் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Updated: வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (21:09 IST)
குரூப்-1 முதனிலைத் தேர்வு வரும் மார்ச் 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  தற்போது இந்த தேர்வு, மே மாதம் கடைசி வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 
 
பாடத்திட்டம், தேர்வுத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதே தேதி மாற்றத்திற்கான காரணம் என டி.என்.பி.எஸ்.சி., விளக்கமளித்துள்ளது.
 
மாற்றப்பட்ட  குரூப்-1 தேர்வின் முதன்மை எழுத்துத்தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் புதிய பாடத்திட்டத்தின்படி விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் அவகாசம் வழங்கவே தேர்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி., கூறியுள்ளது.
 
மேலும் டி.என்.பி.எஸ்.சி.,  குரூப்-1 முதன்மை எழுத்துத்தேர்வு ஜூலை 2வது வாரம் நடத்தப்படும் எனவும் டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

விஜய் வருங்கால பிரதமரா?!.. டி.கே.சிவக்குமார் கொடுத்த ரியாக்‌ஷன்...

40 டிரில்லியன் டாலரை தாண்டிய அமெரிக்க கடன்!.. எல்லாம் டிரம்ப் செஞ்ச வேலை!..

இனிமே ரேஷன் கார்டே தேவையில்ல!.. மொபைலை காட்டியே பொருள் வாங்கலாம்!..

8 மணி நேரத்தில் 4 ஆயிரம் கலெக்‌ஷன்!.. பிச்சையெடுத்து சம்பாதித்த யுடியூபர்!....

டாஸ்மாக் போல் ரேசன் கடைகளிலும் ஆன்லைன் முறை.. செளமியா அன்புமணி கோரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments