நாளை முதல் தொடங்குகிறது டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு: கடும் கட்டுப்பாடுகள்..!
டி என் பி எஸ் சி குரூப் 1 தேர்வு நாளை முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
துணை ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட குரூப் 1 பிரிவின் கீழ் வரும் பதவிகளுக்கு முதல் நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிலையில், இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வு எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முதன்மை தேர்வு நாளை முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இந்த இரண்டு தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு அதன் பின் பணி உத்தரவு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை முதல் இந்த தேர்வில் தொடங்க இருக்கும் நிலையில், தேர்வு கூடங்கள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தேர்வு கூடத்தில் அல்லது தேர்வு மைய வளாகத்தில் தேர்வு கண்காணிப்பாளர்களிடம் அத்துமீறும் செயல்களில் தேர்வர்கள் ஈடுபடக்கூடாது என்றும், மொபைல் போன்கள், ப்ளூடூத் கருவிகள், தகவல் தொடர்பான கருவிகள் உட்பட அனைத்து நவீன தொலைத்தொடர்பு கருவிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவற்றை தேர்வர்கள் எடுத்து வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு கட்டுப்பாடுகளை மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் எழுதிய தேர்வு தாள் செல்லாததாக ஆக்கப்படும் என்றும் அது மட்டும் இன்றி தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
Edited by Mahendran