Daily Horoscope

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. எத்தனை பேர் தேர்ச்சி?

Written By Siva
Updated: திங்கள், 2 செப்டம்பர் 2024 (15:46 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த தேர்வை எழுதியவர்கள் ஆர்வத்துடன் முடிவுகளை பார்த்து வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் முடிவுகள் வெளியானது. மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  வரும் டிசம்பர் 10 முதல் 13 ஆம் தேதி வரை குரூப் 1 முதன்மை தேர்வானது நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 28 ஆம் தேதி  வெளியானது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்வில் முதலில் முதல்நிலை தேர்வும், அதன்பின்னர்  முதன்மை தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு நடந்த நிலையில் மொத்தம் 90 பணியிடங்களுக்கு 1.59 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முதன்மை தேர்விலும் தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்படும்

Edited by Siva
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments