வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (11:51 IST)

குரூப் -4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிப்பா? TNPSC விளக்கம்

tnpsc
குரூப் -4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிப்பது தொடர்பாக எழுந்த கோரிக்கைகளுக்கு TNPSC விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
2022 இல் நடைபெற்ற தொகுதி IV தேர்வின் மூலம் 2020-21, 2021-22, 2022- 23 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கான 10139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது சராசரியாக, ஒரு நிதியாண்டிற்கு 3380 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
 
2024 இல் நடைபெற்ற தொகுதி IV தேர்வின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கான 8932 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு நிதியாண்டிற்கு 4466 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 
 
எனவே 2024 ம் ஆண்டு தொகுதி IV தேர்வின் மூலம் சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு கூடுதலாக 1086 (4466-3380) காலிப்பணியிடங்கள், ஆக மொத்தம் 2172 (1086×2) காலிப்பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படவுள்ளன.
 
எனவே சமூக வலைதளங்களில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக
பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்  என TNPSC  விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Mahendran