ஞாயிறு, 15 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (11:00 IST)

ஹரியானாவில் பாஜக அரசு பதவியேற்பு எப்போது? பிரதமா் மோடி பங்கேற்பு

சமீபத்தில் நடந்த ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தது. அக்டோபர் 17ஆம் தேதி பாஜக அரசு அதிகாரப்பூர்வமாக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில், பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதே நேரத்தில், காங்கிரஸ் 37 இடங்களையும், இந்திய தேசிய லோக் தளம் 2 இடங்களை, மற்றும் சுயேச்சைகள் 3 இடங்களை வென்றுள்ளன.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 40 இடங்களை மட்டுமே வென்ற நிலையில், இந்த முறை 8 தொகுதிகளை கூடுதலாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பெரும்பான்மையைப் பெற்ற பாஜக அக்டோபர் 17ஆம் தேதி பதவியேற்கும் என்றும், காலை 10 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க போவதாகவும் கூறப்படுகிறது. ஹரியானா மாநில முதல்வராக மீண்டும் கட்டர் தேர்வு செய்யப்பட்டு, அவரது தலைமையில் சில அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran