வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (21:10 IST)

மாண்டஸ் புயல் எதிரொலி: டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு!

TNPSC
மாண்டஸ் புயல் காரணமாக ஏற்கனவே பல தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
புயல் காரணமாக கனமழை தமிழகம் முழுவதும் பெய்து வருவதால் அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்பட பல பல்கலைக்கழகங்களில் உள்ள கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய தொழில் பழகுநர் பதவிக்கான தேர்வு புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது இந்த தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran