இன்றும் மழை... தமிழகத்தில் எங்கெங்கு தெரியுமா?
தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆம், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகரின் ஒருசில இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.